2017-09-13 16:43:00

நியாயமான வர்த்தக உறவுகளின் புதிய கலாச்சாரத்திற்கு அழைப்பு


செப்.13,2017. ஒத்துழைப்பு மற்றும் பன்னாட்டு ஒருமைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட நியாயமான பன்னாட்டு வர்த்தக உறவுகளின் புதிய கலாச்சாரம் அவசியம் என்று கூறினார்,  திருப்பீட அதிகாரி ஒருவர்.

வர்த்தகம் மற்றும் வளர்ச்சி குறித்த (UNCTAD) ஐ.நா. கருத்தரங்கில், திருப்பீடப் பிரதிநிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், நியாயமான வர்த்தக உறவுகளின் புதிய கலாச்சாரத்திற்கு அழைப்பு விடுத்தார்.

தொழில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஒளிவுமறைவற்றதன்மை ஆகியவற்றின் தரத்தை ஊக்குவிப்பதற்கு, அந்தந்தப் பகுதி வர்த்தக ஒப்பந்தங்களின் முக்கியமான பங்கையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார், பேராயர் யுர்க்கோவிச்.

நியாயமற்ற வர்த்தக உறவுகள், ஏழ்மைக்கும், மனித வர்த்தகம் அதிகரிப்பதற்கும், நாடுகளின் பொருளாதார வாழ்வில் ஏழைகளும் நலிந்தவர்களும் ஒதுக்கப்படுவதற்கும் காரணமாக அமையும் என்றும் எச்சரித்தார், பேராயர் யுர்க்கோவிச்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.