2017-09-12 15:53:00

புலம்பெயரும் சிறார், இளையோரில் 77% மனிதவர்த்தகத்திற்குப் பலி


செப்.12,2017. மத்தியதரைக்கடல் வழியாக பிற நாடுகளில் அடைக்கலம் தேடிவரும் சிறார் மற்றும் இளையோரில் 77 விழுக்காட்டினர், மனித வர்த்தகம், மற்றும், உரிமை மீறல்களுக்குப் பலியானவர்கள் என, யூனிசெப் நிறுவனத்தின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஐ.நா.வின் குழந்தைநல நிதியமைப்பும், உலக குடிபெயர்தல் (IOM) நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், மத்தியதரைக்கடலின், மத்திய மற்றும் கிழக்குப் பகுதியிலிருந்து ஐரோப்பாவுக்கு வரும் புலம்பெயரும் சிறார் மற்றும், இளையோர், மனித வர்த்தகத்திற்குப் பலியாகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து, குறிப்பாக, சஹாராவையடுத்த பகுதியிலிருந்து வரும் சிறாரும், இளையோரும், இனப்பாகுபாட்டாலும் துன்புறுகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

11 ஆயிரம் சிறார் மற்றும் இளையோர் உட்பட, 22 ஆயிரம் புலம்பெயர்வோர் மற்றும் குடிபெயர்வோரிடம் எடுத்த ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.