2017-09-08 16:11:00

கொலம்பிய அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தையின் உரை


செப்.,08,2017. அரசுத்தலைவரே, அதிகாரிகளே, பல்வேறு இயற்கை வளங்களுடன் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள இந்த நாடு, உயிர்துடிப்புடைய கலாச்சாரத்தைக் கொண்டுள்ளதுடன், தாராளமனதுடன் மக்களை வரவேற்கும் நல்குணத்தையும் கொண்டுள்ளது.

ஆயுதம் தாங்கிய மோதல்கள் முடிவுக்கு வரவும், ஒப்புரவின் பாதையில் நடைபோடவும், கடந்த பல ஆண்டுகளாக இந்நாட்டில் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை பாராட்டுகிறேன். கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், புது நம்பிக்கைகளைத் தருகின்றன.

அரசியல், பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகள் அனைத்தும், உயரிய மாண்பைக் கொண்டிருக்கும் மனிதனை மையம் கொண்டதாக இருக்கவேண்டும். பழிவாங்கும் சோதனைகளிலிருந்து விடுபட்டவர்களாகச் செயல்பட, இத்தீர்மானம் நமக்கு உதவுவுவதாக இருக்கட்டும். ஒருவரையொருவர் மதித்து ஏற்கவும், காயங்களை குணப்படுத்தவும், பாலங்களை கட்டியெழுப்பவும், உறவுகளைப் பலப்படுத்தவும் உதவக்கூடியதாக நம் செயல்பாடுகள் இருக்கட்டும்.

'சுதந்திரமும் ஒழுங்குமுறையும்' என்பது, இந்நாட்டின் விருதுவாக்காக உள்ளது. ஆம், குடிமக்கள் அனவரும் அவர்களின் சுதந்திரத்திகு இயைந்த வகையில் மதிக்கப்பட்டு, உறுதியான ஒழுங்குமுறையால் பாதுகாக்கப்பட வேண்டும். சரிநிகரற்ற நிலைகளே, சமூகத் தீமைகளுக்கு மூல காரணம் என்பதை மறவாதிருப்போம். அனைவரும் முக்கியத்துவம் நிறைந்தவர்களே. பன்மைத்தன்மையே உண்மையான செல்வம். 

பலவீனமானவர்களை, ஒடுக்கப்பட்டவர்களை, குரலற்றவர்களை நோக்கி நம் பார்வையைத் திருப்புவோம். பெண்களை ஏற்று, சமூகத்தில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்போம். வருங்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குவதற்கு, அனைவரின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. திருஅவையும், தன் அழைப்புக்கு விசுவாசமாக இருக்கும் விதமாக, அமைதி நீதி மற்றும் பொதுநலனுக்கென தன்னை அர்ப்பணித்துள்ளது. குடும்பங்களையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஏழைகள் மற்றும் துன்புறுவோருக்கு செவிமடுங்கள்.  அவர்களிடமிருந்தே, வாழ்வு, மனிதாபிமானம், மற்றும், மாண்பு குறித்து நாம் கற்றுக்கொள்கிறோம்.

பகைமையும் பழிவாங்கும் குணமும் தொடர்ந்துவந்துள்ளது. உயிர்களைப் பறிக்கும் வன்முறைகள் வேண்டாம். ஒப்புரவு மற்றும் அமைதியின் பாதையில் செல்லும் உங்களுடன், பலர் துணை நிற்கிறோம் என்பதைச் சொல்லவே நான் இங்கு வந்துள்ளேன்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.