2017-09-07 16:12:00

பேசிக்கொண்டிருப்பதை விடுத்து, பாதுகாப்பில் ஈடுபடவேண்டும்


செப்.07,2017. போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, இனங்களை வேரோடு களைதல், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று, பல பெயர்களில், உலகில் இன்று நடைபெறும் கொடுமைகளை முடிவுக்குக் கொணரவேண்டும் என்று, ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் விண்ணப்பித்தார்.

செப்டம்பர் 6, இப்புதனன்று, ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் பேசிய கூட்டேரஸ் அவர்கள், நாம் பல்வேறு குற்றங்களை வகைப்படுத்திப் பேசிக்கொண்டிருப்பதை விடுத்து, மக்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மக்களைக் காப்பதற்கு, பெரும் திட்டங்களைத் தீட்டுவதில் நேரத்தைச் செலவழிப்பதைவிட, சிறு, சிறு முயற்சிகள் வழியே அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது இன்றைய அவசியம் என்று கூட்டேரஸ் அவர்கள் வலியுறுத்தினார்.

அமைதி, பாதுகாப்பு, முன்னேற்றம், மனித உரிமைகள் என்ற தூண்களின்மீது எழுப்பப்பட்டுள்ள ஐ.நா. அவை, தன் முயற்சிகளைத் தடையின்றி மேற்கொள்ள, உலக அரசுகளின் ஒத்துழைப்புத் தேவை என்று ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.