2017-09-04 16:11:00

துயருறுவோர் முகத்தில் இயேசுவைக் காண்போம்


செப்.04,2017. துன்புறும் மக்களில் இயேசு பிரசன்னமாயிருக்கிறார் என்ற கருத்தை மையமாக வைத்து,  இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'இயேசுவைப்போல் துன்பங்களை அனுபவிக்கும் எண்ணற்ற நம் சகோதர சகோதரிகளில் இயேசு பிரசன்னமாக இருக்கிறார்' என கூறுகிறது, திருத்தந்தையின் திங்கள் செய்தி.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'நாம் கடவுளை எவ்வளவு தூரம் அன்புகூருகிறோம் என்பதைவிட, அவர் நம்மை எவ்வளவு தூரம் அன்புகூருகிறார் என்பதை அறிந்துகொள்வது மிக முக்கியம்'  என உரைத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.