2017-09-02 17:06:00

மன்னிக்கும் இறைவன் கருணையுடன் காத்திருக்கிறார்


செப்.,02,2017. எப்போதும் திறந்த இதயத்துடன் இருக்கும் இயேசு, நம்மை மன்னித்து அரவணைக்கிறார் என்ற கருத்தை மையமாக வைத்து, தன் டுவிட்டர் செய்தியை இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'இயேசு எப்போதும் திறந்த இதயத்துடன் இருக்கிறார். தன் இதயத்தில் இருக்கும் கருணையை அவர் எப்போதும் வெளிப்படுத்துகிறார். அவர் மன்னிக்கிறார், அரவணைக்கிறார், மற்றும், புரிந்துகொள்கிறார்' என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் தன் டுவிட்டர் பக்கத்தில் 9 மொழிகளில் செய்திகளை வெளியிட்டு வருகின்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.