2017-09-02 17:08:00

கணனியில் புனித அன்னை தெரேசா பற்றிய நூல்


செப்.,02,2017. அன்னை தெரேசா புனிதராக அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவுறுவதையொட்டியும், அவர் இறையடி சேர்ந்து 20 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டியும், அன்னை தெரேசா குறித்து, கணனி வழி வாசிக்க உதவும் நூல் ஒன்று வெளியிடப்பட உள்ளது.

செப்டம்பர் மாதம் 4ம் தேதி, அன்னை தெரேசா, புனிதராக உயர்த்தப்பட்டதன் ஓராண்டு நிறைவும், செப்டம்பர் 5ம் தேதி, அன்னை தெரேசா இறந்ததன் 20ம் ஆண்டு நிறைவும் நினைவுகூரப்படுவதையொட்டி, 'அன்புகூரப்படாதவர்களை நாம் அன்புகூர்வோம்' என்ற தலைப்பில், கணனி வழி பயன்பாட்டிற்கான டிஜிட்டல் நூல் ஒன்று வெளியிடப்பட உள்ளது.

அன்னை தெரேசாவின் புனிதர் பட்ட நிகழ்வுக்கு முன்னோடியாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி, இந்த நூல், திருத்தந்தையின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டது என்பதும், தற்போது டிஜிட்டல் வடிவில் வெளியிடப்பட உள்ளது என்பதும், குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.