2017-09-01 16:07:00

பிலிப்பீன்ஸ் நாட்டின் பேராலயம் தீவிரவாதிகளிடமிருந்து மீட்பு


செப்.01,2017. பிலிப்பீன்ஸ் நாட்டின் மராவி நகரில், இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவால் கைப்பற்றப்பட்டிருந்த பேராலயம், ஆகஸ்ட் 29, இச்செவ்வாயன்று அந்நாட்டு இராணுவத்தால் விடுவிக்கப்பட்டது.

பேராலயம் விடுவிக்கப்பட்டாலும், இஸ்லாமிய தீவிரவாதிகளால் சிறைப்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும், அம்மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளர், தெரெசித்தோ சொகானுப் (Teresito Soganub) அகியோரின் நிலை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மராவி ஆயர் Edwin de la Peña அவர்கள், செய்தியாளர்களிடம் பேசியயபோது, தங்கள் பேராலயம் பெருமளவு சேதமடைந்து, அங்குள்ள புனிதப் பொருள்கள் மிக இழிவாக கையாளப்பட்டுள்ளன என்று கூறினார்.

மேலும், தங்கள் பேராலயத்தை மறுசீரமைக்கும் பணியைவிட, பிணையக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பதும், மராவி சமுதாயத்தை ஒப்புரவில் வளர்ப்பதும் மிக முக்கிய பணியாக உள்ளது என்று ஆயர் Edwin de la Peña அவர்கள் கூறியுள்ளார்.

இஸ்லாமிய அரசு என்றழைக்கப்படும் ISIS குழுவுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒரு தீவிரவாதக் குழுவால், மே மாதம் 24ம் தேதி, கைப்பற்றப்பட்ட மராவி பேராலயம், மூன்று மாதங்கள் சென்று, ஆகஸ்ட் 29ம் தேதி மீட்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.