2017-08-30 16:19:00

மியான்மாருக்கு அமைதியைக் கொணரும் தூதராக வரும் திருத்தந்தை


ஆக.30,2017. 2016ம் ஆண்டு மியான்மார் நாட்டில் கிறிஸ்தவம் காலூன்றியதன் 500ம் ஆண்டு கொண்டாடப்பட்டபோது உண்டான மகிழ்வைவிட, தற்போது, திருத்தந்தை மியான்மார் வருகிறார் என்ற செய்தி, மக்களிடையே பெரும் மகிழ்வை உருவாக்கியுள்ளது என்று மியான்மார் தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

யாங்கூன், திருப்பீடத் தூதரகத்தில் செயலராகப் பணியாற்றும் அருள்பணி தாரியோ பவிசா (Dario Pavisa) அவர்கள், நவம்பர் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மியான்மார் நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் குறித்து, செய்தியாளர்களிடம் பேசியவேளையில் இவ்வாறு கூறினார்.

மியான்மார் நாட்டில் அமைதியைக் கொணரும் ஒரு தூதராக வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாட்டு கிறிஸ்தவர்கள் அனைவரும் உலகெங்கிலும் ஒப்புரவை உருவாக்கும் தூதர்களாக மாறவேண்டும் என்ற செய்தியைத் தர வருகிறார் என்று அருள்பணி பவிசா அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.