2017-08-25 15:12:00

தெற்கு ஆசியாவில் அமைதியை கட்டியெழுப்ப இயேசு சபையினர்


ஆக.25,2017. தெற்கு ஆசியாவில், வறுமை, பாகுபாடு, சமய அடிப்படைவாதம் ஆகியவற்றை ஒழிப்பதற்கான யுக்திகளை அறிவித்துள்ளனர், இயேசு சபையினர்.

தெற்கு ஆசிய இயேசு சபை தலைவர் அருள்பணி George Pattery அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு ஆசியாவில் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்துவரும் அடிப்படைவாதத்தை, தங்களின் மறைப்பணிகள் வழியாக ஒழிப்பதற்கு, அந்தந்தப் பகுதி தலைவர்கள் உறுதி எடுத்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தோலிக்க குழுக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், சுதந்திரம், சமத்துவம் மற்றும், உடன்பிறப்பு உணர்வுக் கொள்கைகளின் அடிப்படையில் நீதியான சமூகத்தை அமைப்பதற்கு, யுக்திகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என, UCA செய்தி கூறுகின்றது.

தெற்கு ஆசியப் பகுதி, பொருளாதார சமத்துவமின்மைகள், சாதியப் பாகுபாடு, கலாச்சார ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராய்ப் போராடிக்கொண்டிருக்கின்றது என்றும், இந்தியாவில், தேசியவாதக் குழுக்கள், இந்து கலாச்சாரத்தை உருவாக்க முயற்சித்து வருகின்றன என்றும், அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.