2017-08-25 15:13:00

திருஅவையின் ஆண்களாக, பெண்களாக இருப்பது, தொடர்பின்...


ஆக.25,2017. தொடர்பு கொள்ளுதல், சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்த்தல் என்ற கருத்துக்களை எழுத்து வடிவிலும், உரைகளிலும் வலியுறுத்தி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியிலும் இக்கருத்தை மீண்டும் கூறியுள்ளார்.

"திருஅவையின் ஆண்களாக, பெண்களாக இருப்பது என்றால், தொடர்பின் ஆண்களாக, பெண்களாக இருப்பது என்று பொருள்" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளியன்று வெளியாயின.

திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் வெளியாகும் வலைத்தளத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள @pontifex என்ற பெயர், இலத்தீன் மொழியில், 'திருத்தந்தை' என்பதைக் குறிப்பதோடு, இச்சொல்லுக்கு, 'பாலம்' என்பதும் பொருளாக விளங்குவதால், இந்த வலைத்தளம், திருத்தந்தைக்கும், மக்களுக்கும் இடையே தொடர்புகளை வளர்க்கும் ஒரு பாலமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.