2017-08-22 15:37:00

அசாம், பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு காரித்தாஸ்


ஆக.22,2017. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில், குறிப்பாக, பீகார் மற்றும், அசாம்  மாநிலங்களில், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்திய காரித்தாஸ் நிறுவனம் முன்னணியில் நின்று, அவசரகால இடர்துடைப்பு உதவிகளை ஆற்றி வருகின்றது என்று, அந்நிறுவன செயல்திட்ட இயக்குனர் அருள்பணி Frederick D'Souza அவர்கள் கூறினார்.

வட கிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழை மற்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காரித்தாஸ் நிறுவனம் ஆற்றிவரும் உடனடி உதவிகள் பற்றி ஆசியச் செய்தியிடம் விளக்கிய, அருள்பணி Frederick D'Souza அவர்கள், இம்மக்களுக்கென ஐந்து கோடி ரூபாயை ஒதுக்கி, உணவு, மருந்துகள், கூடாரங்கள் போன்ற உதவிகளை, காரித்தாஸ் வழங்கி  வருகின்றது என்று தெரிவித்தார்.

தன்னார்வலர்கள், மருத்துவ முகாம்களை அமைத்து உதவி வருகின்றனர் எனவும், உதவிகள் தேவைப்படும் எல்லாருக்கும், சமய வேறுபாடின்றி, மனிதாபிமான உதவிகளை ஆற்றி வருகின்றனர் எனவும், அருள்பணி D'Souza அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.