2017-08-17 15:56:00

வறியோரை மேம்படுத்தும் சட்டவரைவு - ஆயர்களின் வரவேற்பு


ஆக.17,2017. வறியோரின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்துடன், பிலிப்பீன்ஸ் நாட்டின் பிரதிநிதிகள் அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு சட்டவரைவு, விரைவில் ஒரு சட்டமாக மாறி, வறியோரை மேம்படுத்தும் என்று தாங்கள் நம்புவதாக அந்நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.

உணவு, உறைவிடம், வாழ்வாதாரம், கல்வி, மற்றும் உடல்நல பாதுகாப்பு என்ற பல அம்சங்களில் வறியோருக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சட்டவரைவு, விரைவில் பாராளுமன்றத்தின் ஒப்புதலோடு சட்டமாகும் என்று ஆயர்கள் பேரவை சார்பில் பேசிய மணிலா துணை ஆயர் Broderick Pabillo அவர்கள், நம்பிக்கை வெளியிட்டார்.

வறியோர் சார்பாக உருவாக்கப்படும் இந்தச் சட்டம், பிலிப்பீன்ஸ் நாட்டில், வறியோருக்கு எதிராக நிலவும் அநீதமான போக்குகளை தடுக்கும் என்று தான் நம்புவதாக, ஆயர் பேரவையின் சமுதாய நீதி பணிக்குழுவின் செயலர் அருள்பணி Edwin Gariguez அவர்கள் கூறினார்.

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.