2017-08-15 16:34:00

சியேரா லியோன் வெள்ளப்பெருக்கில் யுனிசெஃபின் உதவிகள்


ஆக.,15,2017. சியேரா லியோன் நாட்டில், மழையாலும், நிலச்சரிவாலும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைத் தொடர்ந்து, அங்கு அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, ஐ.நா.வின் குழந்தைகள் நல நிதியமைப்பான யுனிசெஃப் (UNICEF).

இத்திங்களன்று அதிகாலை சியேரா லியோனின் Freetownக்கு அருகேயுள்ள பகுதிகளில் துவங்கிய பெருமழையாலும், வெள்ளப்பெருக்காலும், அதன் தொடர்பான நிலச்சரிவுகளாலும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பல்வேறு அடிப்படை உதவிகளை வழங்கி, குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் உடனடியாக இறங்கியுள்ளது, யுனிசெஃப் அமைப்பு.

நிலச்சரிவுகளுக்கிடையில் எண்ணற்றோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்து கல்வி நிலையங்களில் புகலிடம் தேடியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.