2017-08-14 16:30:00

குடியேற்றதாரர்களின் நலவாழ்வு குறித்து அக்கறை கொள்வோம்


ஆக.,14,2017. இத்தாலியின் லெயூக்கா நகரில், பல்வேறு நாடுகளின் குடியேற்றதாரர்கள் பங்குபெறும் ஒருமைப்பாட்டுக் கூட்டத்திற்கு, தன் வாழ்த்துக்களை வெளியிட்டு செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

30க்கும் மேற்பட்ட நாடுகளின் குடியேற்றதார பிரதிநிதிகளைக் கொண்டு, லெயூக்கா நகரில், Carta di Leuca என்ற அமைப்பினால், 'மத்தியதரைப்பகுதி, சகோதரத்துவத்தின் வாயில்' என்ற தலைப்பில் நடத்தப்படும் கூட்டத்திற்கு செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, இத்தாலியின் உஜெந்தோ மறைமாவட்டதின் ஊக்கத்தால் நடத்தப்படும் இந்த கூட்டத்தில், தான் ஆன்மீக வழியில் பங்கேற்பதாகவும், தாராள மனப்பான்மையின் எடுத்துக்காட்டாக இருக்கும் இந்நிகழ்வு, பிறருக்கு செவிமடுத்தல், ஒருமைப்பாடு, அமைதி, சகோதரத்துவம் போன்றவற்றை ஊக்குவிக்க உதவட்டும் எனவும் கூறியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து இத்தாலியில் குடியேறியுள்ளோர், நன்முறையில் வாழ்வை எடுத்துச் செல்ல உதவுவதாக நல்மனம் உடையோரின் நடவடிக்கைகள் இருக்கட்டும் எனவும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.