2017-08-09 16:57:00

இலங்கையில் காணாமற்போனோரைக் கண்டுபிடிப்பதற்கு அலுவலகம்


ஆக.09,2017. இலங்கையில், காணாமற்போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள அலுவலகத்தை, அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர் என்று UCA செய்தி ஒன்று கூறுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட இந்த சட்டவரைவில், இலங்கை அரசுத்தலைவர் மைத்ரிபால சிறிசேனா அவர்கள் அண்மையில் கையொப்பம் இட்டுள்ளது, நம்பிக்கை தருகிறதென்று பல்வேறு மனித நேய அமைப்புக்கள் கூறியுள்ளன.

அரசின் இந்த முயற்சியைத் தொடர்ந்து, காணாமற்போனவர்கள் குறித்த தேடலில் தீவிர நடவடிக்கைகள் நிகழ்ந்தால், மக்களின் நம்பிக்கை இன்னும் வளரும் என்று, கத்தோலிக்க சமுதாய ஆர்வலர் ருக்கி பெர்னாண்டோ அவர்கள் கூறியுள்ளார்.

காணாமற்போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கு, இலங்கை அரசு, அலுவலகத்தை உருவாக்கியுள்ளது, நல்லதொரு திசையில் நாட்டை வழிநடத்தும் என்று, ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.