2017-08-08 15:45:00

உலக பழங்குடியினர் தினம் ஆகஸ்ட் 09


ஆக.08,2017. உலகின் 90 நாடுகளில் வாழ்கின்ற 37 கோடி பழங்குடியின மக்களின் உரிமைகளும், கலாச்சாரங்களும், பாரம்பரிய நிலங்களும் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 9ம் தேதியன்று, உலக பழங்குடியினர் நாளைக் கடைப்பிடிக்கப்படுகின்றது ஐ.நா. நிறுவனம்.

உலக மக்கள் தொகையில் ஐந்து விழுக்காட்டினராக உள்ள பழங்குடியின மக்கள், உலகின் மொத்த ஏழைகளில் 15 விழுக்காட்டினராவும் உள்ளனர் என, ஐ.நா. கூறியுள்ளது.

உலகில் பேசப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ள ஏழாயிரம் மொழிகளில், பெரும்பாலான மொழிகள், பழங்குடியினத்தவரால் பேசப்படுகின்றன என்றும், இவர்கள் ஐந்தாயிரம் விதமான பலதரப்பட்ட கலாச்சாரங்களைக் கொண்டிருக்கின்றனர் என்றும், ஐ.நா. கூறியுள்ளது.

2007ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி, ஐ.நா.பொது அவை, பழங்குடியினத்தவரின் உரிமைகள் பற்றிய உலகளாவிய அறிக்கையை உருவாக்கியது. இதன் பத்தாம் ஆண்டு நினைவு இவ்வாண்டில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.