2017-07-31 16:16:00

துன்புற்ற ஐரோப்பிய திருஅவைகளுக்கு அமெரிக்க உதவி


ஜூலை,31,2017. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள 22 நாடுகளின் 206 உதவித்திட்டங்களுக்கு என 48 இலட்சம் டாலர்களை வழங்க முன்வந்துள்ளது  அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை.

அல்பேனியாவில் 21 ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்டு, 1000க்கும் மேற்பட்ட இளையோருக்கு பல்வேறு கல்விப்பணி ஆற்றிவரும் தொன்போஸ்கோ கல்வி மையத்தின் சேவைகளுக்கு வழங்கப்படவுள்ள அமெரிக்க ஆயர்களின் இந்த நிதி உதவி குறித்து எடுத்துரைத்த அமெரிக்க ஆயர் பேரவையின் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய உதவிகளுக்கான அமைப்பின் தலைவர் கர்தினால்  Blase Cupich அவர்கள், கிழக்கு உக்ரைனின் மோதல் பகுதிகளில் சேவையாற்றும் திருஅவைப் பணியாளர்களுக்கும் தங்கள் உதவி செல்லும் என்றார்.

பல ஆண்டுகளாக அரசியல் மற்றும் மத ரீதியில் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட ஐரோப்பிய மக்கள், தங்கள் திருஅவையை மீண்டும் கட்டியெழுப்ப, இந்த நிதி உதவிகள் அத்தியாவசியமக உள்ளன என்ற கர்தினால் Cupich அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் இத்தகைய உதவித்திட்டங்களுக்கு என திருநீற்று புதனன்று கோவில்களில் நிதி திரட்டப்படுகின்றது என மேலும் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.