2017-07-22 16:31:00

உலகில் எயிட்ஸ் நோய் இறப்புகள் குறைவு


ஜூலை,22,2017. உலகில் எயிட்ஸ் தொடர்புடைய நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை, கடந்த பத்தாண்டுகளில் ஏறத்தாழ பாதியாகக் குறைந்துள்ளது என, ஐ.நா. நிறுவனம் கூறியுள்ளது.

AIDS மற்றும், HIV நோய்க் கிருமிகள் பரவுவதைத் தடுப்பதற்கு முயற்சிக்கும் ஐ.நா.வின் UNAIDS என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், 2005ம் ஆண்டில், 19 இலட்சமாக இருந்த, எயிட்ஸ் தொடர்புடைய இறப்புகள், 2016ம் ஆண்டில், பத்து இலட்சமாகக் குறைந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

ஆயினும், மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, வட ஆப்ரிக்கா, மற்றும், கிழக்கு ஐரோப்பாவில் இந்த இறப்புகள் அதிகரித்துள்ளன எனவும், இப்பகுதிகளில், 2016ம் ஆண்டில், ஒரு இலட்சத்து 90 ஆயிரம் பேர், HIV நோய்க் கிருமிகளால் புதிதாகத் தாக்கப்பட்டனர் எனவும், ஐ.நா. கூறியுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.