2017-07-20 15:51:00

தென் கொரியாவில் சிஸ்டீன் சிற்றாலய பாடகர் குழு


ஜூலை,20,2017. வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலய பாடகர் குழு, தென் கொரியாவில் இசை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, அண்மையில் வத்திக்கான் திரும்பியுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் கொரியாவில் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் மூன்றாம் ஆண்டு நினைவாக, கொரிய ஆயர் பேரவை இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது என்று UCA செய்திக் குறிப்பு கூறுகிறது.

தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே அமைதி நிலவ வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரும்பியதை, வத்திக்கான் பாடகர் குழு மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவுறுத்தியுள்ளது என்று, சோல் பேராயர், கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள் கூறினார்.

50 பேர் கொண்ட இவ்விசைக்குழு, ஆறு நகரங்களில் நடத்திய இசை நிகழ்ச்சிகள், அந்நாட்டின் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக இடம்பெற்றன.

திருத்தந்தை புனித பெரிய கிரகரி காலத்தில் உருவாக்கப்பட்ட இசைக்குழு, இடைப்பட்ட காலங்களில் கலைக்கப்பட்டு, மீண்டும், 1471ம் ஆண்டு திருத்தந்தை 4ம் சிக்ஸ்துஸ் காலத்தில், சிஸ்டீன் பாடகர் குழு என்ற பெயருடன் துவக்கப்பட்டு, இன்றுவரை இயங்கிவருகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.