2017-07-10 15:56:00

சுரங்கத்தொழிலால் ஈக்குவதோரில் விவசாய அழிவு


ஜூலை,10,2017. ஈக்குவதோர் நாட்டில் இடம்பெறும் சுரங்கத் தொழிலின் காரணமாக அந்நாட்டின் விவசாயம் மிகப்பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தன் கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு ஆயர் Geovanni Mauricio Paz Hurtado.

கால்நடைகளுக்கு பெருமளவில் உணவாக உதவி வந்த ஒருவகை புல் இனம் தற்போது அழிந்துவிட்டதற்கு சுரங்கத் தொழிலே காரணம் என கூறிய ஆயர் Paz Hurtado அவர்கள், நிலம் பெருமளவில் அழிவுக்குள்ளாகிவருவதால், விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது என மேலும் தெரிவித்தார்.

கரும்புச் சாறிலிருந்து அச்சு வெல்லம் தயாரிக்கும் முறையும், சுரங்கத் தொழிலின் சுற்றுச்சூழல் அழிவினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என மேலும் கூறிய ஆயர் Paz Hurtado அவர்கள், சுற்றுச்சூழலைக் காக்கவேண்டியது அனைவரின் கடமை எனவும், சுரங்கத் தொழிலால் இன்றைய பொருளாதார பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வு கிட்டினாலும், அதனால் ஏற்படும் தீய பின்விளைவுகளைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டும் எனவும் கூறினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.