2017-07-06 16:20:00

"செயற்கை நுண்ணறிவு: நன்னெறி சார்ந்த ஒரு சவால்" - கருத்தரங்கு


ஜூலை,06,2017. திருப்பீடக் கலாச்சார அவையும், இத்தாலிய அரசின் சார்பாக, திருப்பீடத்திற்கென பணியாற்றும் தூதரகமும் இணைந்து, "செயற்கை நுண்ணறிவு: நன்னெறி சார்ந்த ஒரு சவால்" ("Artificial intelligence: an ethical challenge") என்ற தலைப்பில், ஜூலை 6 இவ்வியாழனன்று கருத்தரங்கு ஒன்றை நடத்தின.

"புறவினத்தாரின் முற்றம்" என்ற அமைப்பின் மற்றுமொரு முயற்சியாக நடைபெற்ற இக்கருத்தரங்கில், ஆக்ஸ்போர்ட், கிரிகோரியன் போன்ற பல்வேறு பல்கலைக் கழகங்களிலிருந்து வந்திருந்த பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் கலந்துகொண்டனர்.

செயற்கை நுண்ணறிவை, கட்டுப்பாடின்றி பயன்படுத்துவதால் வரும் தீமைகள் குறித்து, Stephen Hawking உட்பட, உலகின் முன்னணி அறிவியல் ஆய்வாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கைகளை மனதில்கொண்டு இக்கருத்தரங்கில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.

திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவர், கர்தினால் ஜியான்பிராங்கோ இரவாசி அவர்களும், இத்தாலிய அரசின் சார்பாக, திருப்பீடத்திற்கென பணியாற்றும் தூதர், Daniele Mancini அவர்களும் இக்கருத்தரங்கை துவக்கி வைத்தனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.