2017-07-04 14:59:00

இலங்கை-சதுப்புநிலங்களில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு


ஜூலை,04,2017. இலங்கையில், மனித உறுப்புகள் உட்பட, குப்பைகளைச் சதுப்புநிலங்களில் கொட்டுவதற்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு தலத்திருஅவைத் தலைவர்.

இயற்கை அழகு நிறைந்த Muthurajawela சதுப்பு நிலங்களில், மருத்துவமனைகள் மற்றும், இறந்த உடல்களை வைத்திருக்கும் அறைகளிலிருந்து ஒதுக்கப்பட்ட மனித உடலின் உறுப்புகள் உட்பட, குப்பைகள் குவிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித்.

இக்குப்பைகளால், நெகோம்போ நீர்ப்பரப்புக்குச் செல்லும் வாய்க்கால்கள் மிகவும் மாசடைந்துள்ளன என்றும், இந்நிலை, சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்றும், கர்தினாலின் அறிக்கை எச்சரித்துள்ளது.

கர்தினால் இரஞ்சித் அவர்களின் கண்டன அறிக்கையைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஜூலை முதல் தேதியிலிருந்து, Muthurajawela சதுப்பு நிலங்களுக்குச் செல்லும் குப்பை லாரிகளைத் தடைசெய்யத் தொடங்கியுள்ளனர் என, UCA செய்தி கூறுகின்றது.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.