2017-06-28 17:05:00

மெக்சிகோவில் அமைதியை உருவாக்க மேய்ப்புப்பணித் திட்டங்கள்


ஜூன்,28,2017. மெக்சிகோ நாட்டின் Michoacan மாநிலத்தில், கத்தோலிக்கத் திருஅவை, அமைதியை உருவாக்கும் மேய்ப்புப்பணித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்று பீதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.

அமைதியை உருவாக்கும் நோக்கத்துடன் மக்களின் மனசாட்சியைத் தகுந்த முறையில் வழிநடத்தவும், அரசு, மற்றும் திருஅவை அதிகாரிகள் இணைந்து, அமைதியைக் கட்டியெழுப்ப தீவிர முயற்சிகள் எடுக்கவும், மொரேலியா (Morelia) உயர் மறைமாவட்டம் இத்திட்டங்களை வகுத்துள்ளது.

நாட்டின் அமைதியைக் குலைக்கும் முக்கிய காரணிகளைக் கண்டறிந்து, அவற்றிற்குத் தீர்வு காண்பதற்கும், ஆக்கப்பூர்வமான வழிகளைத் தேடுவதற்கும், இத்திட்டங்கள் உதவும் என்று, இம்மறைமாவட்டத்தின் சார்பில் பேசிய அருள்பணி யுவான் பாப்லோ வர்காஸ் அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

1998ம் ஆண்டில், சனவரிக்கும், மே மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், நிகழ்ந்த 533 கொலைகளுக்கு அடுத்தபடியாக, 2017ம் ஆண்டு, இதே மாதங்களில், 528 கொலைகள் நிகழ்ந்துள்ளன என்று பீதேஸ் செய்தி மேலும் கூறுகிறது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.