2017-06-28 16:55:00

அமைதி மட்டுமே மியான்மார் நாடு செல்லக்கூடிய பாதை


ஜூன்,28,2017. ரொகிங்கியா இஸ்லாமியரைக் குறித்து திருத்தந்தை வெளியிட்டிருக்கும் கவலையுடன், நானும் இணைந்து, அவர்களது துயரங்கள் நீங்கும்படி செபிக்கிறேன் என்று, மியான்மார் நாட்டு கர்தினால், Charles Maung Bo அவர்கள் கூறியுள்ளார்.

அண்மையில் கொண்டாடப்பட்ட இரமதான் விழாவுக்கென கர்தினால் போ அவர்கள் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ரொகிங்கியா பிரச்சனைக்கு அரசியல் வழியில் தீர்வு கொடுக்க தான் விரும்பவில்லை என்றும், ஒரு மேய்ப்பராக இந்தப் பிரச்சனையை பரிவோடு அணுக விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

"அமைதி, இந்நாட்டில் இயலக்கூடிய ஒரு தீர்வு, அமைதி மட்டுமே இந்த நாடு செல்லக்கூடிய பாதை" என்பதை தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ள கர்தினால் போ அவர்கள், மியான்மார் நாட்டின் அனைத்து மதங்களும், 'போர்களை நிறுத்துங்கள்' என்ற செய்தியை தங்கள் வழிபாட்டு தலங்களில் பொருத்தவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

2010ம் ஆண்டு முதல், ரொகிங்கியா இஸ்லாமியருக்கு எதிராக நிலவிவரும் அடக்குமுறைகளால், இதுவரை, அப்பகுதியிலிருந்து, ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர் என்று Zenit கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.