2017-06-15 16:13:00

பிலிப்பீன்ஸில் இரமதான் நோன்புக்கு உதவும் கத்தோலிக்கர்


ஜூன்,15,2017. பிலிப்பீன்ஸ் நாட்டின் மராவி நகரில் நிலவும் கலவரங்களால் அங்கிருந்து வெளியேறியுள்ள இஸ்லாமியர், இரமதான் நோன்பை முடித்து உண்பதற்குத் தேவையான சமையலறை வசதிகளை அப்பகுதியில் வாழும் கத்தோலிக்கர்கள் செய்து தருவதாக, UCAN செய்தி கூறுகிறது.

மிந்தனாவோ பகுதியின் மராவி நகரில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கும், அரசுத் தரப்புக்கும் இடையே நிகழும் மோதல்களால், அங்கிருந்து வெளியேறியுள்ள இஸ்லாமியருடன், கத்தோலிக்கர் இணைந்து, இரமதான் நோன்பை முடிக்கும் விருந்தில் கலந்துகொண்டனர்.

Kapagugopa, அதாவது, கூட்டுறவின் முயற்சி என்ற பெயரில் இயங்கிவரும் இத்திட்டத்தின் வழியாக, இஸ்லாமியர் தங்கள் வழிமுறைகளின்படி நோன்பை முடிப்பதற்கு ஏற்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக, UCAN செய்தி மேலும் கூறுகிறது.

மராவி நகரில் நிகழ்ந்துவரும் மோதல்களால், 65,198 குடும்பங்கள், அந்நகரிலிருந்து வெளியேறி, அருகிலுள்ள ஊர்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று, அரசுத்தரப்பு அறிக்கையொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.