2017-06-14 16:21:00

சிரியா புலம்பெயர்ந்தோர்க்கு இரமதான் உணவளிக்கும் காரித்தாஸ்


ஜூன்,14,2017. மத்திய கிழக்குப் பகுதியில், புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் என, தேவையில் இருக்கும் மக்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவையின் மனிதாபிமான அமைப்பான, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் உதவி வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக, ஜோர்டன் காரித்தாஸ் அமைப்பு, அந்நாட்டில், பெருமெண்ணிக்கையிலுள்ள சிரியா நாட்டுப் புலம்பெயர்ந்த மக்களுக்கு, அவசரகால மற்றும் நீண்டகால வளர்ச்சித் திட்டங்களையும் ஆற்றி வருகின்றது.

ஜோர்டன் காரித்தாஸ் அமைப்பு தொடங்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு, இந்த 2017ம் ஆண்டில் நிறைவுறுவதை முன்னிட்டு, முஸ்லிம்களின் இரமதான் மாதத்தில், புலம்பெயர்ந்துள்ள சிரியா நாட்டினருக்கு உணவும்  வழங்கி வருகிறது.

ஜோர்டன் காரித்தாஸ் அமைப்பு, ஒவ்வொரு நாளும், உதவி தேவைப்படும் ஏறக்குறைய ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு, உணவுப் பொட்டலங்களை அளித்து வருகிறது.

ஜோர்டனில் புலம்பெயர்ந்துள்ள 6 இலட்சத்து 57 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிரியா நாட்டினருள், பெருமளவினர் முஸ்லிம்கள். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.