2017-06-13 16:05:00

இலங்கை அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டவைகளும் ஆபத்தில்..


ஜூன்,13,2017. அரசியலமைப்பில், அடிப்படை மனித உரிமைகள் என உறுதி செய்யப்பட்டுள்ள மத உரிமைகள் மீறப்படுவது, அண்மைக் காலங்களில் அதிகரித்து வருவதாக, அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளது, இலங்கையின் கிறிஸ்தவ சபைகளின் குழு ஒன்று.

அனைத்து மக்களும் ஒப்புரவில் வாழ வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, மதங்களிடையே இணக்க வாழ்வை ஊக்குவிக்கும் நோக்கில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்வதைத் தடுக்கவும், அவ்வாறு தாக்குதல் நடத்துவோர் தண்டிக்கப்படவும், அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, இலங்கை எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு விண்ணப்பித்துள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் இலங்கையில், இதுவரை கிறிஸ்தவர்களுக்கு எதிராக இருபது வன்முறைகள் இடம்பெற்றுள்ளபோதிலும், எவரும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டதாகவோ, தண்டனை பெற்றதாகவோ தெரியவில்லை எனவும் கூறியுள்ளது, இந்த அமைப்பு.

2015ம் ஆண்டிலிருந்து இதுவரை, ஏறத்தாழ 200 முறை கிறிஸ்தவக் கோவில்கள், போதகர்கள் மற்றும் விசுவாசிகள் தாக்கப்பட்டுள்ளதாக உரைக்கும் இந்த கிறிஸ்தவ அமைப்பு, மே மாதம் 18ம் தேதி, இலங்கையின் Devinuwara எனுமிடத்தில் 30 புத்தமத பிக்குகளின் தலைமையில் கூடிய ஏறத்தாழ இரண்டாயிரம் பேர், அங்குள்ள கிறிஸ்தவ வழிபாட்டுத்தலம் முன் போராட்டங்களை மேற்கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.