2017-06-13 16:25:00

அயர்லாந்து கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்பு கூட்டம்


ஜூன்,13,2017. 'இறைவார்த்தைக்குச் செவிமடுப்பதன் வழியாகவே விசுவாசம் வளர்கிறது' என்பதை மையப்பொருளாகக் கொண்டு, பல்வேறு கிறிஸ்தவ சபைகள் இணைந்து, அயர்லாந்தில், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் ஒன்றை நடத்தியுள்ளன.

கத்தோலிக்கர், ஆங்கிலிக்கன், மெத்தடிஸ்ட், லூத்தரன் மற்றும் பெந்தக்கோஸ்து கிறிஸ்தவ சபைகள் இணைந்து, டப்ளின் நகரில் இம்மாதம் 4ம் தேதி முதல் 11ம் தேதிவரை நடத்திய இந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில், விவிலியத்தை மையமாகக் கொண்டு செயல்படவேண்டியது குறித்தும், கடந்த பல‌ ஆண்டுகளாக கிறிஸ்தவ சபைகளிடையே இடம்பெற்றுவரும் கருத்துப் பரிமாற்றங்கள் பற்றியும், மதத் தொடர்பற்றதாக மாற முயலும் அயர்லாந்து சமூகத்தில், கிறிஸ்தவ சபைகளின் அர்ப்பணம் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கிறிஸ்தவ சபைகளிடையே ஒத்துழைப்பு குறித்து இதுவரை கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்தும், இக்கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட, கத்தோலிக்க, ஆங்கிலிக்கன், மெத்தடிஸ்ட், லூத்தரன் மற்றும் பெந்தக்கோஸ்து கிறிஸ்தவ சபைகள் கலந்துரையாடலை மேற்கொண்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.