2017-06-07 16:56:00

'மோரா' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அழைப்பு


ஜூன்,07,2017. 'மோரா' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யுமாறு, இலங்கை ஆயர் பேரவை, கத்தோலிக்க சமுதாயத்திற்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது என்று  UCAN செய்தி கூறுகிறது.

இலங்கை அரசு, மற்றும் காரித்தாஸ் அமைப்பு மேற்கொள்ளும் பணிகளில், மனிதாபிமான அடிப்படையில் மக்கள் ஒன்றிணைந்து, உதவவேண்டும் என்று, இலங்கை ஆயர் பேரவையின் விண்ணப்பம் கோரியுள்ளது.

மே 30ம் தேதி வீசிய இப்புயல் மற்றும் வெள்ளத்தால், 6,58,500க்கும் அதிகமான மக்கள் தங்கள் இல்லங்களை இழந்துள்ளனர் என்றும், இவர்களில் 68,000த்திற்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் UCAN செய்தி மேலும் கூறுகிறது.

இலங்கை காரித்தாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, 25,000த்திற்கும் அதிகமான பள்ளிச் சிறார் தங்கள் பள்ளிப் புத்தகங்கள் அனைத்தையும் வெள்ளத்தில் இழந்துவிட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

'மோரா' புயலின் தாக்கத்தால், மியான்மார், பங்களாதேஷ் நாடுகளிலும், வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை நிகழ்ந்துள்ளன என்று ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.