2017-06-05 16:03:00

சுற்றுச்சூழல் என்பது, மனித குலத்தின் உரிமைச் சொத்து


ஜூன்,05,2017. சுற்றுச்சூழல் குறித்த பொறுப்புணர்வை வெளிப்படுத்தி, இத்திங்களன்று, டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்கள், ஜூன் 5ம் தேதி உலகில் சிறப்பிக்கப்பட்ட உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,

'இயற்கை சுற்றுச்சூழல் என்பது, அனைவருக்கும் பொதுவானது, மனித குலத்தின் உரிமைச் சொத்து என்பதையும், அதுகுறித்த அனைவரின் பொறுப்புணர்வையும் நாம் மறந்துவிடல் கூடாது' என அதில் கூறியுள்ளார்.

மேலும், நம் இதயங்களை மூடுவது, தவறான பாதையை தெரிவுசெய்வது என்ற தவறுகளைத் தவிர்க்கும் பொருட்டு, நாம் தூயஆவியாரால் வழிநடத்தும்படி நம்மை தாழ்ச்சியுடன் அனுமதிப்போமாக, என இஞ்ஞாயிறு டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இத்திங்களன்று காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், இலங்கையின் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.