2017-06-01 15:38:00

திருத்தந்தை - கொடுமைகளுக்கு நடுவே, நற்செய்தியை பறைசாற்ற...


ஜூன்,01,2017. திருத்தூதரான புனித பவுல், கடற்கரையில் ஓய்வெடுத்து, விடுமுறையைக் கழித்தவராக அல்ல, மாறாக, எப்போதும் இறைவனின் பணியை ஆற்றுவதற்கு விரைபவராக நமக்கு முன் திகழ்கிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில், திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசிக்கப்பட்ட பகுதியை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.

நற்செய்தியைப் பறைசாற்றுதல், கொடுமைகளைச் சந்தித்தல், செபித்தல் என்ற மூன்று அம்சங்கள், திருத்தூதர் பவுலின் வாழ்வை அலங்கரித்தன என்று கூறியத் திருத்தந்தை, இன்றும் நாம் சந்திக்கும் கொடுமைகளுக்கு நடுவே, நற்செய்தியை பறைசாற்ற அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

நற்செய்தியைப் பறைசாற்றிய வேளையில், புனித பவுல் சந்தித்த எதிர்ப்புக்களைச் சமாளிக்க, தூய ஆவியார், அவருக்கு ஒரு சில தந்திரமான வழிகளையும் சொல்லித்தந்தார் என இன்றைய வாசகம் கூறுகிறது என்பதையும், திருத்தந்தை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

எதிர்ப்புக்களையும், கொடுமைகளையும் சந்திக்க, புனித பவுல், செபங்களின் வழியே சக்தியைத் தேடினார் என்பதையும், திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.