2017-05-16 17:00:00

பானமா உலக இளையோர் தின இலச்சினை


மே,16,2017. “கண்களில் நோக்கப்பட்ட வேண்டும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், அன்புகூரப்பட வேண்டும்” என, இயேசு நம்மிடம் கேட்கிறார் என்ற வார்த்தைகளை, இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், பானமா நாட்டில், 2019ம் ஆண்டு சனவரி 22ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடைபெறும், உலக இளையோர் தினத்திற்குரிய இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது. 

22 வயது நிரம்பிய கட்டடவியல் மாணவரான Ambar Calvo என்பவர், இதனை வடிவமைத்துள்ளார். மரியின் கனிவையும், அர்ப்பணத்தையும் விவரிக்க விரும்பிய இவர் அமைத்துள்ள இந்த இலச்சினையில், நிறைய அர்த்தங்கள் பொதிந்துள்ளன. இதிலுள்ள பானமா கால்வாய், திருப்பயணிகளை மரியா இயேசுவிடம் அழைத்துச் செல்வதன் அடையாளமாகும். மரியாவுக்கு மேலுள்ள புள்ளிகள், பல்வேறு கண்டங்களிலிருந்து வருகின்ற திருப்பயணிகளைக் குறிக்கின்றன.

இன்னும், ஐரோப்பிய ஆயர் பேவைகள் கூட்டமைப்பின், ஐரோப்பிய ஒன்றிய ஆணக்குழுத் தலைவர் ஜெர்மனியின் Munchen und Frei sing பேராயர், கர்தினால் Reinhard Marx, அக்குழுவின் உதவித் தலைவர்கள், பொதுச் செயலர் மற்றும், ஒத்துழைப்பாளர் கொண்ட ஒரு குழுவையும், இச்செவ்வாய் மாலையில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.