2017-05-13 16:20:00

நோயுற்றோருக்கு பாத்திமா திருத்தலத்தில் சிறப்பு வழிபாடு


மே,13,2017. பாத்திமாவில்  நூற்றாண்டு விழாத் திருப்பலிக்குப் பின்னர், திருநற்கருணை ஆராதனை வழிபாடும் நடைபெற்றது. திருத்தந்தை நோயுற்றோருக்கு, திருநற்கருணை ஆசீரும் வழங்கினார். மேலும், திருப்பலி பாத்திரம் மற்றும், திருப்பலி உடையை, பாத்திமா பசிலிக்காவுக்குப் பரிசாக வழங்கினார் திருத்தந்தை, பாத்திமா திருத்தலத்தினரும், அன்னை மரியா, இம்மூன்று சிறாருக்குக் காட்சியளிக்கும் நிகழ்வைச் சித்தரிக்கும் பளிங்கு திருவுருவத்தை, திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தனர். அன்னை மரியா தன் மேலாடைய விரித்த வண்ணமாகவும், இம்மூன்று சிறாரும் இருபக்கங்களிலும் முழந்தாளிட்டுள்ளது போன்றும் இப்பரிசு உள்ளது.

இவ்விழாத் திருப்பலியை நிறைவுசெய்து, போர்த்துக்கல் நாட்டு ஆயர்களுடன் மதிய உணவருந்தி, Monte Real இராணுவ விமானத்தளம் சென்று உரோமைக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது இந்திய நேரம் இச்சனிக்கிழமை மாலை 6.30 மணியாகும். அன்னை மரியாவை நோக்கும் ஒவ்வொரு நேரமும், அன்பு மற்றும், கனிவின் புரட்சிகரமான தன்மையை மீண்டும் நாம் நம்பத் தொடங்குகிறோம் என, தன் டுவிட்டரில் கூறியுள்ளார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.