2017-05-11 16:28:00

தென் கொரிய புதிய அரசுத்தலைவருக்கு ஆயர்களின் வாழ்த்து


மே,11,2017. அரசுத் தலைவர் ஒருவர், குற்றம் சாட்டப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்ட சங்கடமானச் சூழலைச் சந்தித்த தென் கொரிய மக்கள், புதுத்தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும், புதியத் தலைவர், அமைதி, நீதி வழிகளில் நாட்டை வழிநடுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும், தென் கொரிய ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

தென் கொரியாவின் புதிய அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கத்தோலிக்கர், மூன் ஜே-இன் (Moon Jae-in) அவர்களுக்கு, தென் கொரிய ஆயர் பேரவையின் தலைவர், பேராயர், கிம் ஹீ-ஜுங்க் (Kim Hee-jung) அவர்கள், பேரவையின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சமுதாயத்தில் நலிந்தவர்களும் முழு மதிப்பைப் பெறுவதற்கு உறுதி செய்யும் தென் கொரிய சட்டங்களில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்த அரசுத்தலைவர் மூன் ஜே-இன் அவர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பேராயர் ஹீ-ஜுங்க் அவர்கள், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரிய குடியரசின் 19ம் அரசுத்தலைவராக மே 10, இப்புதனன்று பொறுப்பேற்ற மூன் ஜே-இன் அவர்கள், அந்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டாவது கத்தோலிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

1998ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு முடிய தென் கொரிய அரசுத் தலைவராகப் பணியாற்றிய கிம் டே ஜுங் (Kim Dae jung) அவர்களுக்குப் பின், 64 வயது நிறைந்த மூன் ஜே-இன் அவர்கள், இரண்டாவது கத்தோலிக்க அரசுத்தலைவராக, அந்நாட்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.