2017-05-11 16:05:00

தமிழகத்தில் பாத்திமா அன்னையின் நூற்றாண்டு நினைவு ஆலயம்


மே,11,2017. போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில், லூசியா(10), பிரான்சிஸ்கோ(8),  ஜெசிந்தா(6) ஆகிய மூன்று சிறாருக்கு, அன்னை மரியா காட்சியளித்ததன் நூறாமாண்டு மே 13, வருகிற சனிக்கிழமையன்று, பாத்திமாவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் சிறப்பிக்கப்படுகின்றது. இந்த நூறாம் ஆண்டு நினைவை முன்னிட்டு,  தமிழகத்தின் பாளையங்கோட்டை மறைமாவட்டம், நாலாங்கட்டளை பங்கின் கிளைப்பங்காகிய தாழையூத்து என்ற ஊரில், பாத்திமா அன்னைக்கென, அழகிய புதிய ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. வருகிற சனிக்கிழமை மாலையில், பாளையங்கோட்டை ஆயர் மேதகு ஆ.ஜீட் பால்ராஜ் அவர்கள், இப்புதிய ஆலயத்தை  அர்ச்சிப்பார். நாலாங்கட்டளை பங்கின் முன்னாள் பங்குத்தந்தை சகாய சின்னப்பன், கட்டட பொறியாளர், கோட்டாறு மறைமாவட்டத்தின் சரல் பங்கின் திரு.அருள்ராஜ் ஆகிய இருவரின் முயற்சியால், இப்புதிய ஆலயக் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. தாழையூத்து கிராமத்தின் திரு.சார்லஸ் குடும்பத்தார், அன்னையின் ஆலயத்திற்கு 20 சென்ட் நிலம் வழங்க, திரு.அருள்ராஜ் ஜேன் குடும்பத்தார் ஆலயக கட்டுமானப் பணிகள் நிறைவுற உதவியுள்ளனர். ஆலயக்  கட்டுமானப் பணிகளுக்காக இறைமக்களை ஒருங்கிணைத்து, அன்னையின் பக்தியை பரப்பி, அயராது உழைத்து வந்தவர், தற்போதைய நாலாங்கட்டளை பங்குத்தந்தை. அ.ஜெகன் ராஜா அவர்கள்








All the contents on this site are copyrighted ©.