2017-05-05 16:21:00

பதவிப் போராட்டம் ஒற்றுமைக்கு கேடு, பங்களாதேஷ் கர்தினால்


மே,05,2017. பங்களாதேஷ் நாட்டின் முதல் கர்தினாலாகிய டாக்கா பேராயர், கர்தினால் பாட்ரிக் டி ரொசாரியோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

மேலும், பொருளாதார விவகாரங்கள் குறித்து பிளவுபட்டு நிற்கும், பங்களாதேஷ் கிறிஸ்தவத் தலைவர்கள் மற்றும், கிறிஸ்தவ சமூகங்கள், ஒற்றுமையாக வாழ்வதற்கு அழைப்பு விடுத்துள்ளார், கர்தினால் பாட்ரிக் டி ரொசாரியோ.

பங்களாதேஷில், பல்வேறு கிறிஸ்தவத் தலைவர்களுக்குள் இணக்கநிலை ஏற்படாததால், அச்சபைகள் இணைந்து நடத்தும் கிறிஸ்தவ கூட்டுறவு கடன் வங்கிக் கழகத்தின்(CCCUL) நிர்வாகக் குழு, கடந்த ஆண்டிலிருந்து புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதனால், மக்கள் கடன்பெறுதற்கு கஷ்டப்படுகின்றனர் என்று கூறப்படுகின்றது.

இதை முன்னிட்டு, அந்நாட்டின் எல்லாக் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள கர்தினால் டி ரொசாரியோ அவர்கள், இந்நிலை துர்மாதிரிகையாக உள்ளது எனவும், கிறிஸ்தவ சமூகங்களுக்குள் ஒற்றுமை அவசியம் எனவும் கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.