2017-05-03 17:08:00

"தலித்துகளும் சாதியப் பாகுபாடும்: கிறிஸ்தவ பொறுப்பு"


மே 03,2017. தலித்துக்களை மையப்படுத்தி, மே மாதம் 9, 10 ஆகிய இரு நாட்கள், இங்கிலாந்தில் நடைபெறும் ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் தலைமையுரையாற்ற, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார் என்று இங்கிலாந்து இயேசு சபையினரின் வலைத்தளம் அறிவித்துள்ளது.

இதே கருத்தரங்கில் உரையாற்ற, செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர், நீதிநாதன் அந்தோனிசாமி, வேலூர் மறைமாவட்ட ஆயர் சவுந்தரராஜு பெரியநாயகம், மற்றும், கர்நூல் மறைமாவட்ட ஆயர் அந்தோனி பூலா ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

2013ம் ஆண்டு, இங்கிலாந்தின் Southall என்ற இடத்தில், இயேசு சபையைச் சேர்ந்த அருள்பணி ஜெரார்டு மிச்சேல் (Gerard Mitchell) அவர்கள் 'தலித்துகளும் சாதிய பாகுபாடும்' என்ற தலைப்பில் துவக்கிய ஒரு செப முயற்சியின் பயனாக, 2014ம் ஆண்டு, ஒரு பன்னாட்டு கருத்தரங்கு நடத்தப்பட்டது.

"தலித்துகளும் சாதியப் பாகுபாடும்: கிறிஸ்தவ பொறுப்பு" என்ற தலைப்பில் முதல் முறை நடத்தப்பட்ட பன்னாட்டு கருத்தரங்கிற்குப் பிறகு, இவ்வாண்டு மே 9,10 ஆகிய நாள்களில் இக்கருத்தரங்கு இரண்டாம் முறையாக நடத்தப்பட உள்ளது என்று இங்கிலாந்து இயேசு சபையினரின் வலைத்தளம் கூறியுள்ளது.

ஆதாரம் : Jesuits.org.uk / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.