2017-05-02 16:30:00

குடியேற்றதாரரின் அழுகுரல்கள் திருஅவையின் அழுகுரல்கள்


மே,02,2017. மெக்சிகோவில் ஊழலுக்கு எதிராய் நடவடிக்கை எடுக்கப்படவும், மாண்புடன்கூடிய வாழ்வை ஊக்குவிக்கவும் வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

குவாதலூப்பே அன்னை மரியாவின் திருத்தலத்தில், தங்களின் 103வது ஆண்டுக் கூட்டத்தை நிறைவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், குடியேற்றதாரரின் அழுகுரல்கள், திருஅவையின் அழுகுரல்கள் என்று கூறியுள்ளனர்.

குடியேற்றதாரரின் துன்பங்கள் என்ற தலைப்பில், இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள மெக்சிகோ ஆயர்கள், குடியேற்றதாரரின் துன்பங்களில், இறைவனின்  குரலைக் கேட்கின்றோம், இது, குடியேற்றதாரருக்கு ஆதரவாகச் செயலில் இறங்க நம்மை அழைக்கின்றது எனத் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களையும், குடிமக்களையும் உருவாக்குகின்ற கல்வியைப் பெறுவதற்கு நாட்டினர் எல்லாருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ள ஆயர்கள், நம்பிக்கையின்மை மற்றும், சோர்வை, சிலர் விதைத்துவரும்வேளை, கிறிஸ்தவர்கள், தீமையையும், மரணத்தையும் வென்ற உயிர்த்த கிறிஸ்துவின் ஒளியில் ஊக்கம் பெற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மெக்சிகோவின் 134 ஆயர்கள், இந்த 103வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.