2017-04-07 15:04:00

இந்தோனேசியாவில் அடிமைத்தனத்தை ஒழிக்க பல்மதத்தவர்


ஏப்.,07,2017. இந்தோனேசியாவின் மீன்பிடிப்புத் துறையில் அடிமைத்தனத்தையும், மனித வர்க்கத்தையும் ஒழிப்பதற்கு, அந்நாட்டின் கத்தோலிக்க, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமுதாயங்கள் இணைந்து முடிவெடுத்துள்ளன என்று UCAN செய்தி கூறுகிறது.

இந்த மூன்று சமுதாயங்களையும் சேர்ந்த பிரிதிநிதிகள், அண்மையில், இந்தோனேசிய துணை அரசுத் தலைவர் முன்னிலையில், இந்த முடிவு குறித்து எடுக்கப்பட்ட அறிக்கையொன்றில் இணைந்து கையெழுத்திட்டிருப்பதாக இந்தோனேசிய ஆயர் பேரவையின் நீதி, அமைதி, குடியேற்றதாரர் பணிக்குழுவின் செயலர், அருள்பணி Paulus Christian Siswantoko அவர்கள் கூறினார்.

அடிமைத்தனத்தையும், மனித வர்க்கத்தையும் ஒழிப்பதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அதைக் கடைபிடிக்கும் உறுதி, மனிதர்கள் மனதில் எழவேண்டும் என்பதற்காகவே, பல்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து இம்முயற்சியை எடுத்ததாக, அருள்பணி Siswantoko அவர்கள் கூறினார்.

2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, தெற்கு ஆசியாவில், நவீன அடிமைத்தனம் பரவலாக உள்ள உள்ள நாடாக கருதப்படும் இந்தோனேசியாவில் 7 இலட்சத்திற்கும் அதிகமானோர் நவீன அடிமைகளாக உள்ளனர் என்றும், அதற்கு அடுத்தபடியாக, மியான்மாரில், 5,15,100 பேர், மற்றும் தாயலாந்தில் 4,25,500 பேர், அடிமைகளாக உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.