2017-04-05 16:06:00

தவக்காலச் சிந்தனை : புதுமைகள் நம்மிடையே


நம்மில் பலருக்கு, கடவுள் என்றாவது ஒரு புதுமை செய்யமாட்டாரா என்ற ஏக்கம் மனதில் எப்பொழுதும் இருக்கும். அதன் வெளிப்பாடுதான், புண்ணியத்தலங்களுக்கு நாம் செல்லும் திருப்பயணங்கள். எங்கு புதுமை நடந்ததாகக்  கேள்விப்பட்டாலும், அங்கு அதிகரிக்கும் மக்கள் கூட்டம் - நல்ல முயற்சிதான். இந்த புண்ணிய செயல்களும், திருப்பயணங்களும் நமது முயற்சிகளின் வெளிப்பாடுகள். உண்டியலில் காசு போட்டுவிட்டால், பாவம் கரைந்துவிடும் என்ற மனநிலையில், நம் பாவக்கறையைப் போக்க, நாம், கடவுளுக்கே வழி கற்பிக்கிறோம். ஆனால், கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது, வெளிப்புற செயல்கள் அல்ல, நம்முடைய மனமாற்றம். இறைவன் புதுமை நிகழ்த்தும்பொழுது, அதை, மனிதரால் சாத்தியமற்ற நிலையிலிருந்து தொடங்குகிறார். அபிராகாமிற்கு  அளித்த வாக்குறுதிகளும் அதை புதுப்பிக்க அவர் எடுக்கும் முயற்சிகளும், மனிதரால் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் இயலாதவை. புதுமைகள் நம்மிடமும் நடக்க, இறைவன் எதிர்பார்ப்பது, நமது கீழ்ப்படிதல். இன்றையச் சூழலில், அதன் வடிவம் நமக்கு வித்தியாசமாக இருக்கலாம். மனமாற்றமும், இறைவிருப்பத்தை நிறைவேற்றும் கீழ்ப்படிதலும், புதுமைகள் நம்மிடையே நடந்தேற உதவிடும் காரணிகள். சிலுவை நாதர் இயேசுவின், பாடுகளில் பயணம் செய்ய தயாரிக்கும் வேலையில், நமது, உள்ளங்களும், இல்லங்களும், மாற்றங்கள் கண்டிடட்டும்.

புதுமைகளும், புதுவாழ்வும், நம்மிடையே!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.