2017-04-01 17:10:00

பாகிஸ்தானில், மதம் மாறினால் சிறையிலிருந்து விடுதலையாம்


ஏப்.,01,2017. பாகிஸ்தான் சிறைகளில் வாழும் கிறிஸ்தவக் கைதிகள், இஸ்லாம் மதத்தைத் தழுவினால், அவர்களுக்கு விடுதலை வழங்கத் தயாராக இருப்பதாக அரசு வழக்குரைஞர் ஒருவர் முன்மொழிந்துள்ளதற்கு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர், அந்நாட்டு கிறிஸ்தவத் தலைவர்கள்.

கைதிகளின் விடுதலைக்கு ஈடாக மதமாற்றத்தை முன்வைத்துள்ள அரசு வழக்குரைஞர் சையத் அனீஸ் ஷா அவர்களின் இக்கூற்று, பாகிஸ்தான் நீதித்துறை மற்றும் சட்டம் குறித்த தவறான எண்ணத்தை முன்வைக்கிறது என்றனர் மதத் தலைவர்கள்.

இலாகூரின் சிறையிலிருக்கும் 42 கிறிஸ்தவக் கைதிகள் மதம் மாறினால், விடுதலையைப் பெற்றுத்தர உறுதி அளிப்பதாக, அவர்களைச் சந்தித்தபோது, அரசு வழக்குரைஞர் கூறியுள்ளது, தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.