2017-03-27 16:34:00

தென் அமெரிக்க நகரங்களில் வாழ்வுக்கு ஆதரவான ஊர்வலங்கள்


மார்ச்,27,2017. கருவில் உருவாகி, ஆனால், பிறப்பைக் காணாத குழந்தைகளுக்குரிய உலக நாளையொட்டி அமெரிக்கக் கண்டத்தின் 47 நகர்களில் வாழ்வுக்கு ஆதரவான ஊர்வலங்கள் இடம்பெற்றன.

'வாழ்வு மற்றும் குடும்பத்திற்கென அமெரிக்காவின் ஊர்வலம்' என்ற தலைப்பில், சனிக்கிழமையன்று சிலே, பெரு, ஈக்வதோர், பானமா, உருகுவாய், பராகுவாய், அர்ஜென்டீனா, பிரேசில் ஆகிய நாடுகளின் 47 நகரங்களில் இடம்பெற்ற இவ்வூர்வலங்களுள், சிலே தலைநகரில் மட்டுமே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பிரபலக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், நலப்பணியாளர்கள் என ஆணும் பெண்ணுமாக பல்வேறு தரப்பினர் கலந்துகொண்ட இந்த ஊர்வலங்களில், வாழ்வுக்கு ஆதரவான குரல்கள் எழுப்பப்பட்டன.

2013ம் ஆண்டு முதல் தென் அமெரிக்க நாடுகள், மார்ச் மாதம் 25ம் தேதியை, தாயின் வயிற்றிலேயே சமாதியான குழந்தைகளுக்கு செபிக்கும் நாளாகவும், வாழ்வுக்கு ஆதரவாக குரலெழுப்பும் நாளாகவும் சிறப்பித்து வருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.