2017-03-27 16:47:00

சிறார் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்க‌


மார்ச்,27,2017. வயதில் சிறியோருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்த திருப்பீட அவையின் அங்கத்தினர்கள், கடந்த வாரம் வெள்ளி முதல் ஞாயிறு வரை 3 நாள் கூட்டத்தை மேற்கொண்டனர்.

அருள்பணியாளர்களின் தவறான பாலின நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட இளஞ்சிறார்களுக்குரிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்திய இவ்வவையினர், பல்வேறு திருஅவைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளிலிருந்து பாடங்களைக் கற்று, ஏனையோருக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை எடுத்தியம்பினர்.

திருப்பீடத்துடன் நேரடியாக தொடர்புகொள்ள முயலும், பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய இவ்வவையினர், இத்தகைய நேரடி அணுகுமுறை வழியாக, குணப்படுத்தல் நடவடிக்கை, பலனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.

பல்வேறு கல்வி நிலையங்களை, குறிப்பாக, அதிக எண்ணிக்கையில் கல்வி நிலையங்களைக் கொண்டுள்ள தென் அமெரிக்க திரு அவையில், சிறார்கள் பாலினமுறையில் தவறாக நடத்தப்படுதலை தடுப்பது குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில், பள்ளிச் சிறார் குறித்த ஒரு நாள் கருத்தரங்கை கடந்த வாரம் உரோம் நகரில் ஏற்பாடுச் செய்திருந்தது, இவ்வவை.

உலகம் முழுவதும் சென்று ஆயர் பேரவைகளைச் சந்தித்து, சிறார் பாதுகாப்பு குறித்து உரையாடவும் இவ்வவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி.








All the contents on this site are copyrighted ©.