2017-03-15 16:09:00

தென் சூடான் நாட்டில், தலத்திருஅவை மட்டுமே உதவி செய்கின்றது


மார்ச்,15,2017. தென் சூடான் நாட்டில் அரசு உட்பட பல்வேறு அமைப்புக்கள் நிலைகுலைந்துள்ள நிலையில், அந்நாட்டின் கத்தோலிக்கத் தலத்திருஅவை மட்டுமே மக்களுக்கு உதவிகள் செய்து வருகின்றது என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

2013ம் ஆண்டு முதல், தென் சூடான் நாட்டில் நிலவும் அமைதியற்ற சூழல் தற்போது இனக்கலவரமாக மாறி, அங்கு, தற்போது, 45 இலட்சம் மக்கள் கடுமையான பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் கூறி வருகின்றன.

அங்கு நிலவும் பட்டினி, இயற்கையினால் உருவானது அல்ல, மாறாக, மனிதர்களின் கொடுமையால் உருவானது என்று கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்கள் கூறியுள்ளன.

தென் சூடானின் அரசுத் தலைவர், Salva Kiir அவர்கள், நாடெங்கும் மக்கள் செபிக்கவேண்டும் என்று விடுத்த அழைப்பை, 'அரசியலாக்கப்பட்ட செபம்' என்று, அந்நாட்டு ஆயர்களில் ஒருவர் கூறியுள்ளார் என்று CNA செய்தி கூறுகிறது.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.