2017-03-14 15:34:00

குடியேற்றதாரத் தொழிலாளர்களுக்கு CBCI புதிய இணையதளம்


மார்ச்,14,2017. குடியேற்றதாரத் தொழிலாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்வதற்கு உதவியாக, CBCI என்ற இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தொழிலாளர் பணிக்குழு, புதிய இணையதளம் ஒன்றைத் திறப்பதற்குத் திட்டமிட்டுள்ளது.

மார்ச் 15, இப்புதனன்று திறக்கப்படும் இப்புதிய இணையதளம் பற்றி ஊடகங்களிடம் அறிவித்த, அப்பணிக்குழுவின் செயலர் அருள்பணி Jaison Vadassery அவர்கள், இப்பணிக்குழு, நாட்டின் குடியேற்றதாரத் தொழிலாளர்கள் மீது, கொண்டிருக்கும் அக்கறையை இது காட்டுகின்றது எனத் தெரிவித்தார்.

இந்திய மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பான குடியேற்றம் மற்றும், சமூகநலப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், இப்புதிய இணையதளம் திறக்கப்படுகின்றது என்றும் கூறினார், அருள்பணி Jaison Vadassery.

இந்தியாவின் மாநிலங்களில் அல்லது, வெளி நாடுகளில் வேலை தேடுவோர், தங்களைப் பற்றிய விவரங்களை இதில் பதிவு செய்யலாம் என்றும் அருள்பணி Vadassery அவர்கள், கூறினார்.

இப்புதனன்று நடைபெறும் இந்நிகழ்வில், இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ், செயலர் ஆயர் தியோதோர் மஸ்கரனாஸ், தொழிலாளர் பணிக்குழுத் தலைவர் ஆயர் ஆசுவால்டு லேவிஸ் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆயர் பேரவையின் தொழிலாளர் பணிக்குழு, இந்தியத் தொழிலாளர் கூட்டமைப்போடு இணைந்து இம்முயற்சியில் இறங்கியுள்ளது.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.