2017-03-11 14:34:00

கர்தினால் நிக்கோல்ஸ் : திருத்தந்தைக்கு நன்றியும், செபங்களும்


மார்ச்,11,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் நான்காம் ஆண்டு, மார்ச் 13, வருகிற திங்களன்று நிறைவுறுவதை முன்னிட்டு, திருத்தந்தைக்கு, தன் செபங்களையும், நல்வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர், பிரித்தானிய ஆயர்கள்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவைத் தலைவரான, இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு எழுதிய நல்வாழ்த்துக் கடிதத்தில், ஆயர்களின் செபங்களையும் நல்வாழ்த்துக்களையும், தெரிவித்துள்ளார்.

தூய பேதுருவின் 265வது வழிவருபவராகவும், உரோமை ஆயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் நான்காம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செயல்கள் மற்றும் சொற்களால், கிறிஸ்து மற்றும், திருஅவையின் போதனைகளை உறுதியுடன் நடத்திச் செல்கிறார் எனப் பாராட்டியுள்ளார், கர்தினால் நிக்கோல்ஸ்.

மிகவும் நேர்மையாகவும், புதுமையாகவும் விளங்கும் திருத்தந்தையின் செயல்களும், போதனைகளும், உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளன எனவும், கர்தினால் நிக்கோல்ஸ் அவர்களின் கடிதம் கூறுகிறது.  

2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதியன்று, கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராக, தேர்ந்தெடுக்கப்பட்டார் புவனோஸ் ஐய்ரெஸ் கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ. இவர், திருத்தந்தையாக, பிரான்சிஸ் என்ற பெயரைத் தெரிவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.