2017-03-10 15:12:00

திருப்பீட தலைமையகத்தில் பெண்களின் குரல்


மார்ச்,10,2017. வத்திக்கானில் பெண்களின் இருப்பு அவசியமானது மற்றும், அது, மேலும் அழகு சேர்ப்பதாக இருக்கும் என்று, திருப்பீட கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசி அவர்கள் கூறினார்.

திருப்பீட கலாச்சார அவையில் பெண்கள் ஆலோசனை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது குறித்து, Zenit செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த, கர்தினால் ரவாசி அவர்கள்,  தனது துறையின் நடவடிக்கைகளில், பெண்களின் கண்ணோட்டத்தை உட்புகுத்தும் நோக்கத்தில், புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த அலுவலகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 37 பெண்களின் குரல்கள் கேட்கப்படும் எனவும், பெண்ணாக இருப்பது மிகவும் கடினம் எனவும், ஏனெனில் இவர்கள், ஆண்களோடு சேர்ந்து செயல்பட வேண்டியுள்ளது எனவும் கூறினார், கர்தினால் ரவாசி.

மார்ச் 07, இச்செவ்வாயன்று, திருப்பீட கலாச்சார அவையில், பெண்கள் ஆலோசனை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.