2017-03-08 15:50:00

மனநலக் குறைவினால் துன்புறும் குழந்தைகள் 58 இலட்சம்


மார்ச்,08,2017. உலகின் பல நாடுகளில், குறிப்பாக, சிரியாவில் தொடர்ந்து வரும் போர்ச் சூழல்களால், 12 வயதுக்குட்பட்ட, 58 இலட்சம் குழந்தைகள், பல்வேறு மனநலக் குறைவுகளால் துன்புறுகின்றனர் என்று, Save the Children நிறுவனம் தன் புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

போர்ச்சூழலில் பிறந்து, பல்வேறு கொடுமைகளை நேரிலேயே பார்த்துவரும் இக்குழந்தைகள் தொடர்ந்து அச்சத்தில் வாழ்வதாகவும், இவர்களில் பலருக்கு தற்கொலை செய்துகொள்ளும் தூண்டுதல்கள் எழுவதாகவும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டு, மார்ச் மாதம் 18ம் தேதி, சிரியாவில் துவங்கிய உள்நாட்டுப் போர், விரைவில் தன் ஆறாம் ஆண்டை எட்டவிருக்கும் இவ்வேளையில், Save the Children நிறுவனம், "Invisible Wounds", அதாவது, "காணமுடியாத காயங்கள்" என்ற பெயரில் தன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Save the Children நிறுவனம் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையின் அடிப்படையில், மார்ச் 12 வருகிற ஞாயிறன்று, சிரியாவில் துன்புறும் குழந்தைகளை மையப்படுத்தி, மிலான் நகரில் கருத்தரங்கு ஒன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.