2017-02-27 16:39:00

இயேசுவின் கல்லறைப் பேராலய புதுப்பித்தல் முடிவுற்றது


பிப்.,27,2017. புனித பூமியில் அமைந்துள்ள இயேசுவின் கல்லறைப் பேராலயம், ஒன்பது மாத கால சீரமைப்புப் பணிகளுக்குப்பின், மார்ச் மாதம் 22ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எருசலேமில், இயேசுவின் கல்லறையை உள்ளடக்கிய இப்பேராலயத்தை, மீண்டும் திறக்கும் வழிபாட்டை, கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் மற்றும் கிரேக்க அர்மேனிய கிறிஸ்தவ சபைகள் இணைந்து நடத்தும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த 9 மாத புதுப்பித்தல் பணியின்போது, கடந்த அக்டோபரில், இயேசுவின் கல்லறையைத் திறக்கும் பெரும்பேற்றை அடைந்த, புதுப்பித்தல் பணிக் குழுவின் அறிவியல் ஒருங்கிணைப்பாளர், Antonia Mario Poulou  அவர்கள் பேசுகையில், எருசலேமிலுள்ள கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் மற்றும் கிரேக்க அர்மேனிய கிறிஸ்தவ சபைகளின் பொறுப்பாளர்களின் அனுமதியுடன் இக்கல்லறையைத் திறந்தபோது, ஒருவித நல்ல உணர்வு கடந்துபோனதை அனைவரும் உணர்ந்ததாகத் தெரிவித்தார்.

இருநூறு ஆண்டுகளுக்குப்பின், கடந்த அக்டோபரில், இயேசுவின் கல்லறை திறக்கப்பட்டது, வரலாற்றிலேயே இது மூன்றாவது முறையாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.